Pages

Sep 29, 2015

கம்பன் விழாவும் கரம் சேர்ந்த பட்டமும்!..

கம்பன் விழாவும் அங்கு நடந்த பட்டமளிப்பு நிகழ்வும்!.
ஒரு தொகுப்பு!..

வணக்கம் அன்பான வலையுறவுகளே!

எங்கள் ஆசான் கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா தனது பணியாகக் கடந்த 2 வருடங்களாக எமக்குச் சிறந்த முறையில் யாப்பிலக்கத்தை மிகவும் அருமையாகக் கற்பித்து வருகின்றார். நானும் கவிதைக் கலையினை ஓரளவு கற்றுத் தேர்ச்சி பெற்று வருகின்றேன். அதன் தொடராகச் சென்ற
27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸில் நடைபெற்ற கம்பன் விழாவில் அங்கு வந்திருந்தோர் அனைவரின் முன்னிலையில் ”பாவலர்” என்னும் இப் பட்டத்தினை ஐயா அவர்கள் எனக்கும் வழங்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை
இங்கு மகிழ்வு பொங்க உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்!
~~~~~~~~~~~~

Sep 25, 2015

காண வாரீர்!. காண வாரீர்!..
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!..

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழா.

நாள்:
26.09.2015 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை
27.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 முதல் 20.30 வரை

இடம்:
Le Gymnasz Victor Hugo
Rue Renoir
95140 Garges les Gonesse
[RER - D - Garges Sarcelles]
France

அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!
__()__


காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
~~~~~~~~~~~~~
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
எங்கும் தமிழ்மொழி எதிலும் தமிழென்று
இங்கும் அரசோச்சுசும் எங்கள் தமிழழகைக்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

ஐரோப்பா கண்டத்தில் அழகான பாரீசில்
உய்வோம் தமிழர்நாம் உயிரே தமிழென்று
செய்கின்ற செயலெலாம் சீராகச் சிறப்போங்க
மெய்சிலிர்க்க வைக்கின்ற மேன்மை விழாவினை - நீவீரும்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

பேரறிஞர் சிறப்புரை! பீடுடைப் பட்டிமன்றம்!
தேரென  அசைந்திடும் தேர்ந்தபரத நாட்டியங்கள்!
ஊர்வியக்கும் இன்னிசை! ஒப்பற்ற நூல்வெளியீடு!
கார்கால ஆரம்பமோ கலங்காதீர் விருந்தும்தருவர்! - ஆதலால்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

தொல்காப்பிய மன்றம் தொடங்கும் இரண்டாம்நாள்!
நல்லார் கழகத்தார் நம்கவிஞர் சேர்ந்தொன்றாய்
சொல்லிடவே நாஇனிக்கும்! சூட்டும் பட்டமளிப்பு!
கல்விச் சிறப்பினைக் காட்டும் நிகழ்வுகளை - ஒன்றாகக்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
~~~~~~~~

Sep 24, 2015

எழுச்சி கொள்வீர்!..


இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும்
‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி - இளைய சமூகத்திற்கு
நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய - மரபுக் கவிதை.

இது என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் 
வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். நன்றி!
உண்மையுள்ள
இளமதி.

Sep 17, 2015

வல்வினைகள் வடிந்தோட வாரும் ஐயா!..

 
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
கணநாதன் இன்னருளால் யாவும் சிறக்க 

வேண்டி வாழ்த்துகிறேன்!!
 ~~~~~~
வல்வினைகள் வடிந்தோட வாரும் ஐயா!
   வருந்துயரும் மடிந்திடவே செய்யும் ஐயா!
சொல்லுகின்ற வாய்மணக்கும் உன்றன் நாமம்!
   சுந்தரனே வந்தெங்கள் சோகம் தீர்ப்பாய்!
நில்லென்றால் ஊழ்வினையும் நிற்கும் உன்னால்
   நித்திலனே வந்தெமது புத்தி சேர்வாய்!
அல்லல்கள் அகற்றிடவே ஆடி வாராய்!
   அற்புதனே! ஆனைமுகா! அகிலம் காப்பாய்!

Sep 11, 2015

புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே தங்கம்!

வலைப்பூ உறவுகளே!..
வலைப்பதிவர் திருவிழாப் பார்க்கப் போக ஆயத்தமா?.
புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழாவில்
புதுமைகள் பல படைக்கவுள்ளனராமே!...
நான் அங்குப் போகமுடியாமல் மனம் வருந்துகிறேன்!...
எனக்காக அங்குச் சென்று
வாழ்த்தி வாருங்கள் உறவுகளே!
வண்ணப் படங்களாகக் காணொளியாக
நிகழ்வுகளைக் காண ஆவன செய்யுங்கள்!

உள்ளம் மிகவே மகிழ்வேன்!

நிகழ்வுகளை மனக் கண்ணில் காணும் காட்சியாக இங்குப் பாடியுள்ளேன்!..
~~~~~~~~~~~~~~~~~~

Sep 7, 2015

தமிழையே வேண்டு!..

தமிழையே வேண்டு!
(ஒன்றில் நான்கு)

பஃறொடை வெண்பா

கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
நெஞ்சம் மயங்கும் நெகிழ்ந்துருகி! - வஞ்சியே!
கஞ்சி குடித்தாலும்! கந்தல் அணிந்தாலும்!

பஞ்சம் அடைந்தாலும்! பாரினிலே! - அஞ்சாமல்
விஞ்சும் தமிழையே வேண்டு!

Sep 2, 2015

நான்போற்றும் தெய்வம்!..

அன்புநிறை வலையுலக உறவுகளே!...
இன்று அதிகாலை எனக்கு மின்மடலில் பிரான்சு கம்பன் கழகத்தினரால்
அனுப்பப்பட்ட செய்தியை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் 
மிக்க மகிழ்வுறுகின்றேன்!

Sep 1, 2015

பாத்து வாடி ஆச புள்ள!..

நாத்து நட போற புள்ள - உன்
நடையழக என்ன சொல்ல!
பாத்து வாடி ஆச புள்ள!  - கண்
பாயுதடி உன்ன அள்ள!