Pages

Dec 31, 2015

வந்ததே புதிய ஆண்டு!..

அன்பு உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
~~~~~~~

வந்ததே  புதிய ஆண்டு!

Nov 25, 2015

வணங்குகின்றோம் வாசலிலே!..


காந்தள் மலர்கொய்து கண்களால் நீர்தெளித்து
ஏந்தியநெய்த் தீபமொடு  ஈகைச்சுடர் ஏற்றவந்தோம்!
வேந்தன் வழிவந்த வேங்கைகளே! தூங்கவேண்டாம்!
போந்து வணங்குகிறோம்! போற்றும் மறம்தருவீர்!

Nov 6, 2015

ஆயிரம் காக்கைக்கோர் கல்!


கீதமஞ்சரி வலைப்பதிவரும் Geetha Mathi முகநூல் பதிவருமாகிய சகோதரி கீதா 05.11.2015 முகநூல் பதிவாக  Clicks & Colours எனும் பக்கத்தில் நிழற்பட வல்லுநர் சகோதரர் அரவிந் அமிர்தராஜ் அவர்கள் வழங்கிய படத்துடன் பழமொழி நானூறுப் பாடலும் அதன் விளக்கமும் எனப் பதிவிட்டிருந்தார்.  அருமையான அப்பதிவு என்னை ஈர்க்கவே நானும் சில குறட்பாக்களை எழுதி இங்கு தருகிறேன். அவர்களின் அனுமதியுடனேயே இப்பதிவினை இடுகின்றேன்!
நிழற்படம் மற்றும் பாடற் பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரர்களே!

Nov 3, 2015

என்ன செய்தாயோ!..

என்ன செய்தாயோ என்னைநீ!
இப்படி மாற நானின்று!
என்ன செய்தாயோ என்னைநீ!
எக்கண மும்உன் நினைவே
என்னை ஆட்டிப் படைக்கவே!
என்ன செய்தாயோ என்னைநீ!

Oct 30, 2015

அகிலம் சேர்ப்பீர்!..


அகிலம் சேர்ப்பீர்!
~~~~~~~
மொழியென்று முன்னோர்கள்
 முதுமதியால் ஒலிசேர்த்தெம்
  முன்னே வைத்தார்!
வழிவழியாய் வந்தோரும்
 வடிவங்கள் பலபடைத்து
  வழங்கிச் சென்றார்!
விழிகொள்ளா வரிசையது
 வியந்தின்றும் பார்க்கின்றார்
  வேற்று நாட்டார்!
செழிப்புறவே காத்திடுவோம்
 சீர்பரவச் செய்திடுவோம்
  சிந்தை ஏற்றே!

Oct 26, 2015

மங்கல வாழ்த்து!


25.10.2015 மணவாழ்வில் இணைந்திட்ட 
அன்பு மகள் மருமகனை
வாழ்த்திப் பாடிய மங்கல வாழ்த்து!
~~~~~~~~

Oct 22, 2015

உய்கின்ற வழியொன்று உரைத்திடுக!..

விஜயதசமித் தினத்தில் வித்தைகளை ஆரம்பித்தால் விருத்தியடைந்து சிறப்புறுவர் என்பது சைவசமயிகளின் நம்பிக்கை ஆகும்.
அன்றையத் தினத்தில் திருவருளுடன் குருவருளையும் 
வேண்டல் மிகச் சிறப்புடையது.
நானும் கல்விக்கதிபதியான அன்னை சரஸ்வதியை வணங்குவதுடன்
எனக்கு யாப்பிலக்கண வித்தையைக் கற்றுத்தருகின்ற
ஆசான் கி. பாரதிதாசன் ஐயாவின் ஆசியையும் வேண்டுகின்றேன்!

வலையுலக உறவுகள் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்  
விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~

Oct 19, 2015

முப்பெரும் சக்திகளே!.
முன்னின்று காத்திடுவீர்!..


முப்பெரும் சக்திகளே! முன்னின்று காத்திடுவீர்!
எப்பொழுதும் நல்லருள் ஈந்திடுவீர்! - ஒப்பிலாச்
செம்மொழிச் சீரோங்கச் செய்திடுவீர்! யாவரையும்
அம்மையுங்கள் அன்பால் அணைத்து!
~~~~~~~~~~

Oct 14, 2015

எங்குமே உன்னருள்!..

எங்குமே உன்னருள் ஏந்திடும் பொன்னெழில்
  என்றுமே காணுகிறேன்!
 ஏற்றமே நான்பெற இன்னலும் நீங்கிட
  என்னையும் காத்திடுக!

Oct 9, 2015

விழாவோங்க வாழ்த்துங்கள்!..


வலைப்பதிவர் திருவிழா நெருங்குகின்றது!..
இன்னும் இரண்டே நாட்கள்தான்...!
நெஞ்சினில் இனிக்கும் கனவுகளுடன் புதுகையில்
பதிவர்கள் எல்லோரும் கண்டு குலாவி உண்டு நிகழ்வுகளில்
கலந்து மகிழவிருக்கும் இனிய தருணம் கிட்டப்போகிறது!

Oct 5, 2015

அன்பாலே அரசாள வேண்டும்!..


அன்பாலே அரசாள வேண்டும்!
~~~~~~~~~~~
விடியாத பொழுதாகத்
தினமேங்கும் ஏழைக்கு
விடிகின்ற நாளொன்று வேண்டும் - வறுமை
முடிகின்ற நாள்தோன்ற வேண்டும்!

Oct 2, 2015

வாருங்கள் உறவுகளே!..

நான்காம் ஆண்டு
வலைப்பதிவர் திருவிழா - 2015
புதுக்கோட்டை

வாருங்ள் வுளே!

Sep 29, 2015

கம்பன் விழாவும் கரம் சேர்ந்த பட்டமும்!..

கம்பன் விழாவும் அங்கு நடந்த பட்டமளிப்பு நிகழ்வும்!.
ஒரு தொகுப்பு!..

வணக்கம் அன்பான வலையுறவுகளே!

எங்கள் ஆசான் கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா தனது பணியாகக் கடந்த 2 வருடங்களாக எமக்குச் சிறந்த முறையில் யாப்பிலக்கத்தை மிகவும் அருமையாகக் கற்பித்து வருகின்றார். நானும் கவிதைக் கலையினை ஓரளவு கற்றுத் தேர்ச்சி பெற்று வருகின்றேன். அதன் தொடராகச் சென்ற
27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸில் நடைபெற்ற கம்பன் விழாவில் அங்கு வந்திருந்தோர் அனைவரின் முன்னிலையில் ”பாவலர்” என்னும் இப் பட்டத்தினை ஐயா அவர்கள் எனக்கும் வழங்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை
இங்கு மகிழ்வு பொங்க உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்!
~~~~~~~~~~~~

Sep 25, 2015

காண வாரீர்!. காண வாரீர்!..
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!..

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழா.

நாள்:
26.09.2015 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை
27.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 முதல் 20.30 வரை

இடம்:
Le Gymnasz Victor Hugo
Rue Renoir
95140 Garges les Gonesse
[RER - D - Garges Sarcelles]
France

அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!
__()__


காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
~~~~~~~~~~~~~
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
எங்கும் தமிழ்மொழி எதிலும் தமிழென்று
இங்கும் அரசோச்சுசும் எங்கள் தமிழழகைக்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

ஐரோப்பா கண்டத்தில் அழகான பாரீசில்
உய்வோம் தமிழர்நாம் உயிரே தமிழென்று
செய்கின்ற செயலெலாம் சீராகச் சிறப்போங்க
மெய்சிலிர்க்க வைக்கின்ற மேன்மை விழாவினை - நீவீரும்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

பேரறிஞர் சிறப்புரை! பீடுடைப் பட்டிமன்றம்!
தேரென  அசைந்திடும் தேர்ந்தபரத நாட்டியங்கள்!
ஊர்வியக்கும் இன்னிசை! ஒப்பற்ற நூல்வெளியீடு!
கார்கால ஆரம்பமோ கலங்காதீர் விருந்தும்தருவர்! - ஆதலால்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

தொல்காப்பிய மன்றம் தொடங்கும் இரண்டாம்நாள்!
நல்லார் கழகத்தார் நம்கவிஞர் சேர்ந்தொன்றாய்
சொல்லிடவே நாஇனிக்கும்! சூட்டும் பட்டமளிப்பு!
கல்விச் சிறப்பினைக் காட்டும் நிகழ்வுகளை - ஒன்றாகக்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
~~~~~~~~

Sep 24, 2015

எழுச்சி கொள்வீர்!..


இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும்
‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி - இளைய சமூகத்திற்கு
நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய - மரபுக் கவிதை.

இது என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் 
வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். நன்றி!
உண்மையுள்ள
இளமதி.

Sep 17, 2015

வல்வினைகள் வடிந்தோட வாரும் ஐயா!..

 
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
கணநாதன் இன்னருளால் யாவும் சிறக்க 

வேண்டி வாழ்த்துகிறேன்!!
 ~~~~~~
வல்வினைகள் வடிந்தோட வாரும் ஐயா!
  வருந்துயரும் மடிந்திடவே செய்யும் ஐயா!
சொல்லுகின்ற வாய்மணக்கும் உன்றன் நாமம்!
  சுந்தரனே வந்தெங்கள் சோகம் தீர்ப்பாய்!
நில்லென்றால் ஊழ்வினையும் நிற்கும் உன்னால்
  நித்திலனே வந்தெமது புத்தி சேர்வாய்!
அல்லல்கள் அகற்றிடவே ஆடி வாராய்!
  அற்புதனே! ஆனைமுகா! அகிலம் காப்பாய்!

Sep 11, 2015

புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே தங்கம்!

வலைப்பூ உறவுகளே!..
வலைப்பதிவர் திருவிழாப் பார்க்கப் போக ஆயத்தமா?.
புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழாவில்
புதுமைகள் பல படைக்கவுள்ளனராமே!...
நான் அங்குப் போகமுடியாமல் மனம் வருந்துகிறேன்!...
எனக்காக அங்குச் சென்று
வாழ்த்தி வாருங்கள் உறவுகளே!
வண்ணப் படங்களாகக் காணொளியாக
நிகழ்வுகளைக் காண ஆவன செய்யுங்கள்!

உள்ளம் மிகவே மகிழ்வேன்!

நிகழ்வுகளை மனக் கண்ணில் காணும் காட்சியாக இங்குப் பாடியுள்ளேன்!..
~~~~~~~~~~~~~~~~~~

Sep 7, 2015

தமிழையே வேண்டு!..

தமிழையே வேண்டு!
(ஒன்றில் நான்கு)

பஃறொடை வெண்பா

கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
நெஞ்சம் மயங்கும் நெகிழ்ந்துருகி! - வஞ்சியே!
கஞ்சி குடித்தாலும்! கந்தல் அணிந்தாலும்!

பஞ்சம் அடைந்தாலும்! பாரினிலே! - அஞ்சாமல்
விஞ்சும் தமிழையே வேண்டு!

Sep 2, 2015

நான்போற்றும் தெய்வம்!..

அன்புநிறை வலையுலக உறவுகளே!...
இன்று அதிகாலை எனக்கு மின்மடலில் பிரான்சு கம்பன் கழகத்தினரால்
அனுப்பப்பட்ட செய்தியை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் 
மிக்க மகிழ்வுறுகின்றேன்!

Sep 1, 2015

பாத்து வாடி ஆச புள்ள!..

நாத்து நட போற புள்ள - உன்
நடையழக என்ன சொல்ல!
பாத்து வாடி ஆச புள்ள!  - கண்
பாயுதடி உன்ன அள்ள!

Aug 29, 2015

நல்லதமிழ் என்றனுக்கு ஊட்டு!..

நாமகளின் நற்கருணை நன்கெனக்குக் கிட்டிடவே
 நானிசைக்கும் சந்தவகைப் பாட்டு!
  நாவினிக்கச் சொல்லடுக்க நாளுமுனைத் தேடுகிறேன்
   நல்லதமிழ் என்றனுக்கு ஊட்டு!

Aug 25, 2015

இன்தமிழே! என்னுயிரே!..

இன்தமிழே! என்னுயிரே!
(பதினான்கு மண்டிலம்)
~~~~~~~~~~~~~~~~
1.
இன்தமிழே! என்னுயிரே! தென்மொழியே! தொன்மொழியே!
மென்தமிழே நன்மையொளிர் பொன்மலையே! - அன்றுமொளிர்
இன்றுமொளிர்! என்றுமொளிர் நன்மொழியே! பன்மலரே!
சின்னவள்நான் சென்னியில் சேர்!

Aug 23, 2015

கனவு காணுங்கள்!..


கனவு காணுங்கள்!..
(பதினைந்து மண்டிலம்)
~~~~~~~~~~~~~~

1.
மனமே தினம்காண் கனவு! வனம்போல்
நனிசீர் கனிவு! புனைவாய் - இனஞ்சேர்
நினைவு! சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து
புனல்சீர் உனைச்சேர் முனைந்து!

Aug 21, 2015

கொள்ளையிடும் குட்டிநிலா!..

கொள்ளையிடும் குட்டிநிலா!
மும்மண்டில வெண்பா!
~~~~~~~~~~~~~

கொத்துமலர் கோர்த்தஎழில்! கொள்ளையிடும் குட்டிநிலா!
முத்துமுகிழ் முத்தமழை முல்லைமணம்! - முத்திதரும்
சொத்துமவள்! சொல்லரும்தேன்! சுத்திநிதம் சூழ்ந்தவளி!
சித்தத்தைக் கொல்லுறும் சீர்!

Aug 17, 2015

நிறைய வேண்டும்!..


நிறைய வேண்டும்!
~~~~~~~~~~
உலகமெலாம் ஓர்மொழியே பேச வேண்டும்!
  ஒப்பில்லா மொழியாக அன்பு வேண்டும்!
கலகமில்லா வாழ்க்கைதனைக் காண வேண்டும்!
  கலந்துறவாய் மக்களெல்லாம் களிக்க வேண்டும்!
விலகிடாத பாசமொடு வாழ வேண்டும்!
  வேதனைகள் சோதனைகள் தீர வேண்டும்!
நலமடைய நல்வழிகள் தேட வேண்டும்!
  நாடெல்லாம் ஓரினமாய் உயர வேண்டும்!

Aug 11, 2015

உன்னோடு!.. எனக்கு!..

உன்னோடு!... எனக்கு!..
(வெண்பாக் கொத்து)
~~~~~~~

குறள் வெண்பா!

உன்னோடு கொண்டேன் உயரன்பே! ஒண்டமிழே!
என்றும் அருள்வாய் எனக்கு!

Aug 6, 2015

பாடிடவா தாலாட்டு!...மன்னவனே! பாடிடவா தாலாட்டு வாய்..திறவாய்!
இன்னும்நீ தூங்கி இருக்கவோ என்பாட்டு!
என்னவரே உன்உறக்கம் ஏனின்னும் தீரவில்லை!
சின்னவிழி தான்திறப்பாய் தாலேலோ!
தேவனேஎன் நாதனே தாலேலோ!

Aug 1, 2015

தமிழ்போல் வாழ்வோம்!...


கண்ணா! உன்றன் குரல்கேட்கக்
  கன்னி நெஞ்சம் அலைவதுமேன்?
வண்ணான் துவைக்கும் செயலாக
  வனிதை மனத்தைத் துவைப்பதுமேன்?
அண்ணா போன்று மேடையிலே
  அழகாய்ப் பேசும் சொல்லழகா!
புண்ணாய் வாட்டும் இப்பொழுதைப்
  போக்கப் பூந்தேன் மருந்திடுவாய்!

Jul 25, 2015

வந்தது யாரோ!..


எண்ணச் சுழலினில் என்னைத் தொலைத்தே
எங்கோ போயிருந்தேன்! - நாடி
வண்ண அலைகளாய் வந்தென் உளம்புக
வார்த்தை வசமிழந்தேன்!

Jul 17, 2015

இடர்நீக்கிக் காப்பாய் இனி!..

ஊனை உயிரை உலுக்கிய நோயதுவும்
தானே தளர்ந்து தணிந்ததுவே! - தேனே!
சுடர்தமிழே! உன்னைத் தொழுகின்றேன்! என்றன்
இடர்நீக்கிக் காப்பாய் இனி!
~~~~~~~~~~~~~~~

Jan 17, 2015

பூந்தமிழ் வாழ்த்துக்கள்!..


வலையுலக அன்பு உறவுகள் அவர்தம் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் உளமார்ந்த தமிழர் புத்தாண்டுப்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

1.
பொங்கல் திருநாளின் பூந்தமிழ் வாழ்த்துக்கள்!
எங்கும் மலர்க எழில்!

2.
தமிழரின் புத்தாண்டைச் சாற்றி மகிழ்ந்தே
அமிழ்தப் பொங்கலை ஆக்கு!

Jan 7, 2015

அன்னையிட்ட தீ!...


அன்னையிட்ட தீயென் அடிவயிற்றுள் மூண்டெழவே
உன்னைநினைக் கின்றேன் உயர்தமிழே! - முன்னைப்
பிறந்தவளே! என்னுள் நிறைந்தவளே! யாப்பில்
சிறந்தவளே! காப்பாய் செழித்து!