Pages

Dec 31, 2012

புதுவருட வாழ்த்து..


வாழ்த்துகிறேன்...

வலையுலக அன்புத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!

அனைவரும் உடல் உள ஆரோக்கியமுடன் உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறி நலம் பல பெற்று, நீடூழி வாழ எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!!!


வாழ்க வளமுடன்!
----------------%%%%%%%%

_()__()__()__()__()__()__()__()__()__()__()__()__


வாழ்வென்றால்....
********

நம்பிக்கை வேண்டும் வாழ்க்கையிலே
நடந்தவை என்றும் நடந்தவையே...

சுகமோ துக்கமோ களிப்போ கண்ணீரோ
முடிந்தது என்றும் முடிந்தவையே...

கடந்ததை எண்ணிக் கலங்கி நின்று
விடிந்திடும் பொழுதை இழந்துவிடாதே...

வருந்திப் புலம்பி வதைபல பட்டு
வாழ்வை வீணே அழித்துவிடாதே...

இரவு வந்தால் விடியலும் வரும்
இயற்கை நியதி சுழற்சியிது தொடரும்...

இருள் மறைந்து ஒளி பிறக்கும் 
இறையருள் என்றும் துணையென நிற்கும்...

சோகங்கள் மட்டும் வாழ்க்கை அல்ல
சுகமும் எமக்கு நிரந்தரமல்ல...

சோர்ந்துவிடாதே தொடர்ந்து நடைபோடு
இதுவும் ஓர்நாள் கடந்து போகும்....

அன்புடன் இளமதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வாழ்ந்தே தீருவோம்...:)
*************

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).

_()_()_()_

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை      ”கிளிக்”         
                பண்ணவும். ...நன்றி..:)

Dec 23, 2012

மேரி மேரி கிறிஸ்மஸ்...

நத்தார் வாழ்த்து!...

வலையுலக அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்!!!

எனது க்விலிங் கைவேலையில் நத்தார் வாழ்த்து மடல்கள்....:)........

மேலும் சில........:)
-------
   
மாதா கோவில் மணி ஓசை....
--------------------------------------படித்ததில் பிடித்தது.....

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை...
 *********
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான், 
கறுப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான், 
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, 
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை......


வாழ்க்கைத் தத்துவம் 
`´´´´´´´´´´´´´´´
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று.... 
வாழ்க்கையும் அப்படி தான்.... 
முடியும் வரை தெரிவதில்லை.... 
வாழ்வது எப்படி என்று....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை      ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

Dec 14, 2012

மியாவ்...

நான்..மீரா! எனக்கு (14.12.12) இன்றைக்கு பிறந்தநாள்...:)))


இவ தான் எங்கள் வீட்டுச் செல்லக்குட்டி மீரா...:). இவளுக்கு இன்று 1 வயது. இவளை எட்டுக் கிழமைக் குட்டியாக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்தோம்.  இவளுடன் இன்னும் 7 பேர் சகோதரர்கள். அவர்களை விட்டு எம்முடன் வந்ததும் ஒரு சில மணித்தியாலங்களுக்கு கொஞ்சம் தனிமையாய் ஒதுங்கி ஓரமாக இருந்தாள். அவளுக்கென வாங்கி வைத்திருந்த தன் குஷன் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டாள்.  சிறிது தூங்கி எழுந்ததும் பழகிய வீடு போல் எல்லா இடமும் போய்ப் பார்த்து நுழைந்து ஓடி விளையாடி இயல்பாகிவிட்டாள்....;) 

இன்று எம் வீட்டில் குடும்ப அங்கத்தவர்களில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒருவரும் அவளே. அவளின் விளையாட்டும் குறும்புகளும் ஏராளம்.... 

சில வேளைகளில் எம் மனதில் கவலை, குழப்பம், சோகம் என எத்தகையதொரு மனநிலை ஏற்பட்டாலும் அவள் எம்மிடம் வந்து ஏறிக் குதித்து விளையாடும்போது அத்தனையும் அடுத்த நொடியில் மறைந்து மறந்து நாமும் இயல்பாகிவிடுவோம். யார் வீட்டுக்கு வந்தாலும் எல்லோருடனும் விரைவில் சேர்ந்து பழகிவிடும் இயல்பானவள்....  

என் அன்பான ஆசையான அருமை மீராக்குட்டியின் பிறந்ததினத்தை உங்களுடன் பகிர்வது எனக்கு மிக மகிழ்வாய் இருக்கிறது!!!.

இந்த க்விலிங் என் அன்புத்தோழி அதிராவுக்காகச் செய்து அவரின் வலைப்பூவில் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. இப்போ மீண்டும் மீராவுக்காகவும் இன்னுமொருதரம் உங்கள் பார்வைக்கு.....மீராவுக்காக பழைய திரைப்படப் பாடலான ”மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி”.... தேடினேன் கிடைக்கவில்லை..:(
அதற்குப் பதிலாக இந்தக் காணொளியைப் பாருங்கள்.....:)))இதில் வரும் சூட்டி பூஸ்களைப்போல எங்கள் மீராவும் தண்ணீர்க் குழாயில் தண்ணீர் குடிக்கும் அழகு...பாருங்கள்...:)))Dec 13, 2012

அன்பு மொழி...


இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஒரு தம்பதியினரின் திருமண நாளுக்காக, அவர்களுக்கு அவர்களின் நிழற்படத்தினையே இதில் இணைத்து வாழ்த்து மடல் க்விலிங் கைவேலைப்பாட்டுடன் செய்திருந்தேன். 
அவர்களின் படத்தினை இங்கு சேர்த்துத்தர அனுமதி இல்லாதமையால் ஒரு கார்ட்டூன் படத்தை இதில் இணைத்துத் தந்துள்ளேன்.....:)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌன மொழி
*******
கண்கள் நான்கும் பேசும் போது, 
காதல் மொழி மௌனமொழி.... 
பெண்கள் நாணம் கொள்ளும் தருணம், 
பிறக்கும் மொழி மௌனமொழி.... 

கரையெங்கும் அலை ஓய்ந்த பின், 
அவை உரைக்கும் மொழி மௌனமொழி.... 
மழலை பேசும் அமுத மொழி, 
அமைதி எனும் மௌனமொழி.... 

தூக்கம் இமையைத் தழுவும் நேரம், 
கனவுகளின் மொழி மௌனமொழி.... 
நோக்கம் எதுவும் இல்லா நேரம், 
நாம் பேசும் மொழி மௌனமொழி.... 

மழை அடித்து ஓய்ந்த பின், 
மண்வாசனை ஒரு மௌன மொழி.... 
சிலை வடிவாய் வடித்த போதும், 
அது பேசும் மொழி மௌனமொழி.... 

அமைதி தேடும் மனங்கள் நாடும்,
உண்மை மொழி மௌன மொழி...
அருளாளன் சொன்னமொழி
அகிலம் காக்கும் அன்பு மொழி ..... 
(நான் ரசித்த கவிதை...)
------------------------------------------------------------------------------

என்னைக் கவர்ந்தது: கவிதை, நடிகர்கள், நடிப்பு, இசை, காட்சி அமைப்பு அத்தனையும் எனக்கு ரொம்பவே பிடித்த அருமையான பாடல்....... =============

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

Dec 8, 2012

ஓம்!


இந்து சமயத்தில் தேவநாகரி மொழியில் இக் குறியீட்டினை  ஓம் எனக் கூறுவர்.  இது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான  ஒலி வடிவமாகும்.  ஓங்காரம் அல்லது ஓம்காரம் என இதனைத் தியானப்பயிற்சி முறைகளில் சொல்லுவார்கள். இதனைப்பற்றி பல இணையத்தளங்களில் மேலும் பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
              
         குறிப்பாக அலை பாயும் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த ஓம் என்னும் ஓங்காரத்தினை தினமும்  சில நிமிடங்களுக்கு சரியான ஒரு ரிதத்தில்  திரும்பத் திரும்பக்  கண்களை மூடிக்கொண்டு கூறிப் பார்த்தால் உண்மை விளங்கும்...:) முன்பு இதை எமக்கு அன்புச் சகோதரர் ஹைஷ் பயிற்றுவித்திருக்கிறார். இதனை அப்பியாசிப்பதன் மூலம் எங்கும், எல்லாவற்றிலும் நிறைந்த அன்பினையும் அமைதியையும் உணரக்கூடிய சக்தியை நாம் பெறலாமென  அனுபவசாலிகள் சொல்லுவார்கள்.

    இந்த ஓம் வடிவத்தினைப் பலரும் பலவிதமாகச் செய்துள்ளனர்.  நானும் க்விலிங் கைவேலைப்பாட்டில்  ஏதோ சிறிதளவு முயன்றுள்ளேன்.:) இவ் வடிவம் நான் ஆரம்ப காலத்தில் மூன்றாவதாகச் செய்த ஒன்று ஆகும்...  உங்களின் மேலான கருத்தினை எதிர்பார்க்கின்றேன். மிக்க நன்றி....

சாந்தி நிலவ வேண்டும்...எங்கும் சாந்தி நிலவ வேண்டும்......”

**********

என்னைக் கவர்ந்ததில் இதுவும்......


~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

Dec 1, 2012

அன்பு வணக்கம்                                       அம்மாவுக்கு என் முதல் வணக்கம்!
                                       அறிவு தந்த அப்பாவுக்கும் நல் வணக்கம்!
                                       தங்கத் தமிழுக்கு தனி வணக்கம்! - நான்
                                       தலை வணங்கும் தோழர்களே அன்பு வணக்கம்! 
***************

வாருங்கள் என் அன்புத்தோழர்களே!
அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்!

இளையநிலா வலைப்பூ அறிமுகத்திற்கு வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் இளமதியின் அன்பு வணக்கம்.
முதலில் (கோ)காப்பி, தேநீர், பலகாரம் எடுங்கோ......:)) நன்றி!
அறிமுகம்
~~~~~~~
என்னை அறிமுகம் செய்யுமளவிற்கு நான் அப்படி ஒன்றுமே இன்னும் செய்யவில்லை..:) செய்ய மனதில் எண்ணங்கள் இருப்பினும் கால நேர வாழ்க்கை முறைகளினால் சிலபல தாமதங்கள்....

அவ்வப்போது உங்கள் இல்லங்களுக்கு வந்து சில இடங்களில் காலடி பதித்தும் சில இல்லங்களில் கால் பதிக்காமலும் உள்ளேன். இன்னும் எவ்வளவோபேர் இல்லங்களுக்கும் வரவேண்டும் வருவேன்.

இந்த இளையநிலாவை வானில் முகில் விலக்கி ஒளிவீசுவதற்கு வித்திட்டு மிகுந்த பாடுபட்ட அன்புத் தோழிகள் அதிரா, அஞ்சு, இமா என்ற மூவர்.

ஆரம்பத்தில் ”பிரியசகி” அம்முலுவையும் என்னையும் வலைப்பூ தொடங்குங்கள் என சாதாரணமாகச் சொல்லி வந்த இந்த `முப்பெருந்தேவி`களும் நாளடைவில் மிரட்டல் பண்ணுகிற அளவிற்கு முன்னேறியதால் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து அம்முலு, “பிரியசகி” என்னும் வலைப்பூவை ஆரம்பித்துவிட்டார்.

நான் நழுவி இருந்திட்ட போதிலும் மற்ற இருவரும் ஓய்ந்து போனாலும் எங்கள் அதிரா,.. (என்னை வேறு எதையுமே நினைக்கவிடாமல் ஓயாமல் கேட்டுக்கேட்டு.... இதை ஆரம்பிக்காவிட்டால் இனிப் பேச்சே இல்லை என்கிற அளவிற்கு அன்புக் கட்டளை இட்டுவிட்டார்....:) தட்டமுடியவில்லை....
அன்பிற்கு அடிபணிந்து இளையநிலா இன்று உதயமாகிறது........

 வலைப்பூ தொடங்கியாயிற்று. ஆனால் வலைப்பூவைப்பற்றி எதுவுமே தெரியாது. ஆகையினால் அவ்வபோது  ஏற்படும் சரி, பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்திவிடுங்கள். திருந்துவதுவதற்கு உதவுங்கள். உங்கள் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. 
இந்த இளையநிலா வானில் பிரகாசிப்பதற்கு நட்சத்திரங்களான உங்களின் உதவி அவசியமானது தோழர்களே!....

 அவ்வப்போது வானில் நிலவு தோன்றாவிட்டாலும் நட்சத்திரங்களாகிய நீங்கள்  இங்கு தோன்றி உங்களின் பிரகாசத்தினால் ஏனையவர்களை மகிழ்வுறச் செய்யவேண்டும். இது என் பணிவான, அன்பு வேண்டுகோள் _()_ .

 இவ் வலைப்பூ என் ஆருயிர்த் தோழி அதிராவினால்தான் உருவானது. தனது கால நேரத்தைக்கூட பொருட்படுத்தாமல் மிகக் குறைந்த நாட்களில் இவ் வலைப்பூவினை அழகுற அமைத்துத் தந்துள்ளார். 
அதிராவின் தன்னலங் கருதாத இப் பேருதவியை நான் வாழுங்காலம் வரை மறக்கமாட்டேன்.

எங்கோ பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் நாங்கள் அனைவரும் அவரவர்க்கு குடும்பச் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் வலைப்பூக்களில் தமக்குத்தெரிந்த ஆர்வமான விடயங்களை பதிவிட்டு, பகிர்ந்து,  பின்னூட்டங்களில் சிலாகித்து சிரித்து மகிழ்வதைப் பார்க்கின்றேன்.

 எனக்கும் தெரிந்ததை, என்னால் முடிந்ததை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். குறிப்பாக க்விலிங் (Quilling) என்னும் கைவேலை செய்வதில் மிகுந்த ஆர்வவமாயுள்ளேன். அதை நான் அன்புத்தோழி அஞ்சுவிடமிருந்து கற்றுவருகிறேன். எந்தவித பிரதிபலனும் கருதாமல் எனக்கு எப்பவும் உதவிக்கொண்டிருக்கும்  அன்பு அஞ்சுவுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்!!!
  அதில் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை சிலவற்றை முயன்றுள்ளேன். அவற்றை உங்கள் பார்வைக்கு இங்கு தொடர்ந்து தரவுள்ளேன்.   வாருங்கள், பாருங்கள், உங்கள் கருத்துக்களையும் தவறாது பதிவிடுங்கள். 

அன்புத் தோழர்களே! குற்றங்குறைகளைத் திருத்தி எப்பொழுதும் கூடவே வந்து இந்த இளையநிலாவை வழிநடத்தித் தரவேண்டுமென உங்களை அன்போடு   வேண்டுகிறேன். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!!!

அன்புடன்
இளமதி...


என்னைக் கவர்ந்த பாடல்...

என்னைக் கவர்ந்த பொருள் நிறைந்த சூப்பர் ஸ்டாரின் அருமையான பாடல்...
உங்களுக்கும் பிடிக்குமென எண்ணுகிறேன்..,;).. *******************

படித்ததில் பிடித்தது...பகிர்ந்து கொள்ள விரும்பியது...


-----------------


குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)